×

சின்ன வெங்காயம் கிலோ 70க்கு விற்பனை

போச்சம்பள்ளி, ஜூலை 29: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சின்னவெங்காயம் வரத்து குறைந்ததால் வாரச்சந்தை, உழவர் சந்தை மற்றும் மளிகை கடைகளில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்தது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு சின்னவெங்காயம் கிலோ 30 முதல் 50க்கு விற்பனை செய்யப்பட்டது. இது மெல்ல மெல்ல விலை அதிகரித்தது. சின்ன வெங்காயம் கிலோ 100 முதல் 130 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் சின்ன வெங்காயத்தின் பயன்பாட்டை குறைத்துக்கொண்டு, பெரிய வெங்காயத்தை மாற்றாக பயன்படுத்த துவங்கினர்.

விலை உயர்ந்ததால் விவசாயிகள் போட்டி போட்டு, நேரடியாகவும், ஊடு பயிராகவும் சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்தனர். தற்போது சின்ன வெங்காயம் வரத்து அதிகரிக்க துவங்கியது. இதனால் விலை குறைந்துள்ளது. போச்சம்பள்ளியில் நேற்று சின்ன வெங்காயம் கிலோ ₹70க்கு விற்பனை செய்யப்பட்டது. நகரில் சாலையோரம் டெம்போ மற்றும் சரக்கு ஆட்டோகளில் சின்ன வெங்காயத்தை மூட்டை மூட்டையாக வைத்து கூவி கூவி விற்பனை செய்தனர். விலை குறைந்ததால் சின்னவெங்காயத்தை பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.

The post சின்ன வெங்காயம் கிலோ 70க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Pochampalli ,Chinnavengayam ,Krishnagiri district ,Varachandha ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...