×

எடியூரப்பா, குமாரசாமி வெளிநாடு பயணம்: கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் வெளிநாடு சென்றார். அவருடன் மகனும் ஷிவமொக்கா தொகுதி எம்பியுமான ராகவேந்திராவும் சென்றுள்ளார். துபாய், ஐரோப்பா மற்றும் மாலத்தீவில் ஒருவாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். எடியூரப்பா வெளிநாடு செல்வது வழக்கமானது என்றாலும் இவ்வாண்டு முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமியும் ஐரோப்பா சென்றுள்ளதால், அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சிங்கப்பூரில் சதி திட்டம் தீட்டப்படுகிறது என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குற்றம்சாட்டியுள்ள நிலையில் எடியூரப்பா, குமாரசாமியின் வெளிநாட்டு பயணம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post எடியூரப்பா, குமாரசாமி வெளிநாடு பயணம்: கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Yeddyurappa ,Kumaraswamy ,Karnataka ,Bengaluru ,Former ,Chief Minister ,Shivamogga ,
× RELATED பாஜவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை:...