×

தமிழ்நாடு அரசு கூடுதலாக கடன் வாங்கவில்லை 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி ரூ.100 லட்சம் கோடி கடன்: கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி: சபாநாயகர் அப்பாவு பேட்டி

நாகர்கோவில்: தமிழ்நாடு அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஒரு காசு கூட கூடுதலாக கடன் வாங்கவில்லை. பிரதமர் மோடி பதவியேற்ற 9 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளார். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மட்டும் ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்று காலை நாகர்கோவில் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு சாமான்ய மக்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுகிறது. புதிய தொழில் தொடங்கவும், தொழில் ஆதாரத்திற்காக மட்டுமே கடன் வாங்கி உள்ளது. தமிழக அரசு கடன் வாங்க நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஒரு காசு கூட கூடுதலாக கடன் வாங்கவில்லை. தமிழக அரசு வாங்குகின்ற கடன் இலவசம் கொடுப்பதற்கு அல்ல.

தமிழக அரசுக்கு கடன் அதிகமாக வாங்கும் அளவிற்கு தகுதி இருக்கிறது. ஒன்றிய பா.ஜ. அரசு 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக இந்தியாவின் கடன் தொகை ரூ.55 லட்சம் கோடி. ஆனால் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின், வாங்கிய கடன் மட்டும் ரூ. 100 லட்சம் கோடி ஆகும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மட்டும் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.16 லட்சத்து 16 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பின்னர் வட்டி இல்லா கடன் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கொடுக்கிறார். 4.50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் இந்த அரசு ஏழைகளுக்காக செய்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் தொழில் தொடங்குவதற்காக ஏராளமானவர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளார்கள். இந்தியாவில் தொழில் தொடங்கும் மாநிலங்களில் 16-வது இடத்தில் இருந்து தமிழ்நாடு இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாடு அரசு கூடுதலாக கடன் வாங்கவில்லை 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி ரூ.100 லட்சம் கோடி கடன்: கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி: சபாநாயகர் அப்பாவு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,PM Modi ,Speaker ,Appavu ,Nagercoil ,Modi ,Dinakaran ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...