×

அத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் வீடு: கலெக்டர் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி அருனோதையா நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் கருதி அரசு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பிலும், தேசிய அனல் மின் கழக நிறுவனத்தின் சமூக பங்களிப்புடனும் ரூ.2.11 கோடி ஒதுக்கீடு செய்து 46 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜி. ரவி முன்னிலை வகித்தனர்.

துணைத் தலைவர் எம்டிஜி கதிர்வேல் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, பொன்னேரி சப் – கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட்வத்ஸ், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் ஜி.பாலமுரளிதரன், என்டிஇசிஎல் மனிதவள மேம்பாட்டு மேலாளர் அகஸ்டின் ரைமண்ட், பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர் உதயசூரியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர், 46 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான அரசாணையை வழங்கி, பூமி பூஜையை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள், அரசு அலுவலர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

* கிராம மகளிர் நன்றி
கடந்த 27 ஆண்டுகளாக அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்களாக எம்.டி.ஜி தாட்சாயணி குடும்பத்தினர் பதவியேற்று நடத்தி வருகின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலிருந்தும் சட்டமன்ற நிதி, ஒன்றிய நிதியினையும் பெற்று தனது சொந்த செலவிலும் அத்திப்பட்டு ஊராட்சி சேர்ந்த பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும், மகளிருக்கும் என்னென்ன தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என திங்கள் முதல் ஞாயிறு வரை பட்டியல் போட்டு ஒவ்வொரு நாளும் ஒரு பணிகள் செய்ய வேண்டும் என மக்களுக்கு தெரியப்படுத்தி செய்து வருகின்றனர். அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி சேர்ந்த பொதுமக்களுக்கு எந்தவித விருப்பு, வெறுப்பு இல்லாமல் சேவை செய்து வருகின்றனர். இதற்காக, ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பிலும் கிராம மகளிர் நன்றி தெரிவித்தனர்.

The post அத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் வீடு: கலெக்டர் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Adipattu Puraduchi ,Collector ,Bhoomi Bhoja ,Ponneri ,Attipattu ,Meenchur Union ,Thiruvallur District ,Arunodhaya Nagar ,FIG ,Collector Earth Zoo ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...