×

தாம்பரம் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பெண்ணிடம் தங்க செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது

ஆவடி: பெண்ணிடம் மூன்று சவரன் தங்கச் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை, நந்தம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மாதவி(40). இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம், இருசக்கர வாகனத்தில் தாம்பரம் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவர்களுக்கு பின்னால், இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த வாலிபர் மாதவி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க செயினை பறித்து சென்றார். இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் மாதவி புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பழைய வண்ணராப்பேட்டையை சேர்ந்த விக்னேஷ்(27) என்பவரிடம் நேற்று விசாரணை நடத்தினர். அவர் செயின் பறித்ததை ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post தாம்பரம் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பெண்ணிடம் தங்க செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Tambaram-Meenjoor ,Avadi ,Madhavi ,Nantambakkam, Chennai.… ,Tambaram – Meenjur ,
× RELATED செபி தலைவர் மாதவி மீது ஹிண்டன்பர்க்...