×

என்.எல்.சி.க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு கைதான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுவிப்பு!

கடலூர்: என்எல்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பின் அந்த போராட்டம் முற்றுகைப் போராட்டமாக மாறியது. இதனால் அன்புமணி ராமதாஸ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்கக்கோரி பாமகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர், போலீசார் மீது கல்வீசினர். அவர்களை தண்ணீர் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து நெய்வேலியில் வன்முறை வெடித்து போராட்டக் களமாக மாறியது. போலீசார் தடியடி கண்ணீர் புகை கொண்டு வீச்சு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் என்எல்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் கைதைக் கண்டித்து, பாமகவினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் ஆங்காங்கே சாலைமறியல் மற்றும் பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவம் அரங்கேறுவதால் அசம்பாவிதங்களை தடுக்க அன்புமணி விடுவிக்கப்பட்டார். அன்புமணி ராமதாஸ் உடன் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாமக நிர்வாகிகளையும் போலீசார் விடுவித்தனர்.

The post என்.எல்.சி.க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு கைதான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுவிப்பு! appeared first on Dinakaran.

Tags : N.N. l. RC Bambaka ,Annpurani Ramadas ,Bambaka ,Cuddalore ,Pamaka ,NLC ,Cuddalore District ,N. l. RC Bambagya ,Bharat ,Dinakaran ,
× RELATED ஆண்டுக்கு இரண்டரை லட்சம் அரசு வேலை...