×

மேட்டூர் அணையின் நீர்வரத்து 15,232 கனஅடியாக அதிகரிப்பு: அணையில் இருந்து 12,000 கனஅடி நீர் வெளியேற்றம்..!

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,232 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவிலிருந்து கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிந்து காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 177 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 3 ,343 கன அடியாக அதிகரித்தது. மேலும் மாலையில் மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 10,232 கன அடி வீதம் தண்ணீர் வந்தது.

இந்நிலையில் இன்று மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 12,444 கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,444 கனஅடியில் இருந்து 15,232 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64.9 அடியில் இருந்து 65.90அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 28.56 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

The post மேட்டூர் அணையின் நீர்வரத்து 15,232 கனஅடியாக அதிகரிப்பு: அணையில் இருந்து 12,000 கனஅடி நீர் வெளியேற்றம்..! appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Salem ,Kabini ,Krishnarajasagar dams ,Karnataka ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!