×

மகளிர் உலக கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா-தென்ஆப்ரிக்கா ஆட்டம் டிரா

டுனெடின்: 9வது உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும். இதில் நியூசிலாந்தின் டுனெடின் மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் ஜி பிரிவில் தென்ஆப்ரிக்கா-அர்ஜென்டினா அணிகள் மோதின.

இதில் ஆட்டத்தில் முதல் பாதியில் 30வது நிமிடத்தில் தென்ஆப்ரிக்கா கோல் அடித்தது. 2வது பாதியில் 66வது நிமிடத்தில் 2வது கோல் அடித்து 2-0 என முன்னிலை பெற்றது. அதன்பின்னர் எழுச்சிகொண்டு ஆடிய அர்ஜென்டினா 74 மற்றும் 79வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தது. முடிவில் 2-2 என போட்டி டிராவில் முடிந்தது.

The post மகளிர் உலக கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா-தென்ஆப்ரிக்கா ஆட்டம் டிரா appeared first on Dinakaran.

Tags : Women's World Cup Football ,Argentina ,South Africa ,Dunedin ,9th World Cup Women's Football Match ,Australia ,New Zealand ,Dinakaran ,
× RELATED 4 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி