×

நூதன முறையில் கடத்தல்: கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் 1.166 கிலோ தங்கம் பறிமுதல்..!!

திருவனந்தபுரம்: கேரளாவிற்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.166 கிலோ தங்கத்தை, கேரள விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானம், கேரள விமான நிலையத்திற்கு வந்தது. கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது பாலக்காட்டை சேர்ந்த மிதுன் சேர்ந்த பயணி வந்துள்ளார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரை நிறுத்தி அவர் உடைமைகளை சோதனை நடத்தினர். உடைமைகளில் எதுவும் இல்லை. பின்னர், சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை தனி அறைக்கு அழைத்துச் சென்று, ஆடைகளை களைந்து சோதனை நடத்தினர். அப்போது மிதுன் என்பவர் தனது உடலில் தங்கத்தை பெஸ்ட் வடிவில் மாற்றி அதனை கேப்சூல்களில் வைத்து இருந்தது தெரிந்தது. அவரிடம் இருந்து 1 கிலோ 166 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நூதன முறையில் கடத்தல்: கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் 1.166 கிலோ தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Kerala State ,Kochi Airport ,Thiruvananthapuram ,Kerala airport ,Dinakaran ,
× RELATED கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி...