×

நைஜரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் பதற்றம்: நாடாளுமன்றம் முன்பு வாகனங்கள், கட்டடங்களுக்கு தீ வைப்பு

நைஜர்: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் அதிபர் முஹமத் பாஸுமை அதிகாரத்தில் இருந்து அகற்றி ஆட்சியை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதால் பெரும் கலவரம் முன்னுள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் பாதுகாப்பின்மை மற்றும் பொருளாதார சரிவு காரணமாக அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாத நிலை கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிபர் முகமது பாஸுமை அவரது பாதுகாவலர்களே சிறைபிடித்தனர்.

நாடு சீர்குலையாமல் இருப்பதே தற்போது முக்கியமானது என்பதால் அதிபர் சிறைபிடிக்கப்பட்டதற்கு அந்நாட்டு ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதிபர் பாஸுமின் அலுவலகத்தின் முன்பு கூடிய நூற்றுகணக்கானோர் வாகனங்கள் மற்றும் கட்டடங்களுக்கு தீ வைத்தனர். கலவரத்தை பயன்படுத்தி சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் கட்டடங்களில் நுழைந்து நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை களவாடி சென்றனர். நாடு முழுவதும் ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அதிபர் சிறைபிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் என கலவரம் நீடித்து வருவதால் நாடே பதற்றத்தில் உள்ளது.

The post நைஜரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் பதற்றம்: நாடாளுமன்றம் முன்பு வாகனங்கள், கட்டடங்களுக்கு தீ வைப்பு appeared first on Dinakaran.

Tags : Niger ,President ,Muhammad Bazumi ,
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!