×

கழிவுநீர் கலக்கும் நிலையில் நெல்லை தாமிரபரணி கரையில் புதிய சுத்திகரிப்பு தொட்டி அமைப்பு

நெல்லை : தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பது நீண்டகாலமாக தொடரும் தீராத பிரச்னையாக உள்ளது. குறிப்பாக மாநகர பகுதியில் குறுக்குத்துறையில் இருந்து சிந்துபூந்துறையை தாண்டி பல இடங்களில் மாகர பகுதி கழிவுநீர் ஓடைகள் நேரடியாக தாமிரபரணியில் சங்கமிக்கிறது. இதை தடுக்க பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே தாமிரபரணி ஆறு அருகிலேயே கழிவுநீர் ஓரமாக சென்று சுத்திகரிப்பு செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் போதிய பலனை தரவில்லை.

இந்நிலையில் நெல்லை மீனாட்சிபுரம் அருகே ரயில்வே பாலம் பகுதியில் ஆற்றில் கழிவு அதிகளவில் கலக்கிறது. இதுபோல் சந்திப்பு வீரராகவபுரம், சிந்துபூந்துறை, மேகலிங்கபுரம் உள்ளிட்டப் பகுதிகளிலும் கழிவுநீர் ஓடைபோல் சென்ற கலக்கிறது. சிந்துபூந்துறை பகுதியில் ஆறு நோக்கி வரும் கழிவுநீரை கரையோரம் சுத்திகரிப்பு தொட்டிகள் அமைத்து திருப்பி விட்டனர். இந்த தொட்டிக்கும் மேலாக கழிவுநீர் நிரம்பு வெளியேறியது.

இதற்கிடையே தற்போது மேகலிங்கபுரம் பகுதியில் புதியதாக கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இயற்கை முறையில் வடிகட்டப்படும் கழிவுநீர் மீண்டும் ஆற்றில் கலக்க பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் எந்த அளவு பலன் தரும் என தெரியவில்லை.

எனவே நிரந்தர தீர்வாக ஆற்றை நோக்கி வரும் கழிவுநீர் ஓடைகளை வேறு பாதையில் திருப்பி நேரடியாக மாநகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்ல வழி ஏற்படுத்தவேண்டும் என மாநகர மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுபோல் மாநகர பகுதியில் உள்ள கால்வாய்களில் இணையும் குடியிருப்பு கழிவு நீரையில் பாதை மாற்றி திருப்பவேண்டும் என எதிர்பார்கின்றனர்.

The post கழிவுநீர் கலக்கும் நிலையில் நெல்லை தாமிரபரணி கரையில் புதிய சுத்திகரிப்பு தொட்டி அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Copperani ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...