×

கோத்தகிரியில் சூறாவளிக்காற்றுக்கு 20க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன

*மின்கம்பங்கள் முறிந்தன: வீட்டின் கூரைகள் பறந்தன

கோத்தகிரி : கோத்தகிரி அருகே உள்ள ஈளாடா வனப்பகுதியில் சூறாவளி காற்றுக்கு 20 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக பலத்த காற்று வீசி வரும் நிலையில், கோடநாடு மற்றும் ஈளாடா பகுதியில் அவ்வப்போது சாரல் மழையும்,பலத்த காற்றும் வீசி வருகிறது.

இதனால் ஈளாடா பகுதியில் இருந்து ஈளாடா தடுப்பணை மற்றும் கதகட்டி செல்லும் சாலையோரம் உள்ள வனப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது.
மேலும் காற்றின் வேகம் குறையாமல், அப்பகுதியில் அவ்வப்போது சாரல் மழையுடன் காலநிலை நிலவி வருவதால் கதகட்டி மற்றும் ஈளாடா தடுப்பணை செல்லும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும் எனவும்,மேலும் அப்பகுதியில் மரங்கள் விழுந்தால் உடனே வனத்துறைக்கு தகவல் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.

கோத்தகிரி நகர் பகுதிகள்,கைக்காட்டி,ஈளாடா,கோடநாடு, நெடுகுளா, சுண்டட்டி, கேர்ப்பெட்டா,பெரிய சோலை,அரவேனு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் சாரல் மழை பரவலாக பெய்துள்ளது.இந்நிலையில் பலத்த காற்று வீசிய நிலையில் கோத்தகிரி பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டேண்டு,கூட்டுறவு பண்டக சாலை அருகே இருந்த இரண்டு சமின்கம்பங்கள் பலத்த காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது.மேலும் ரபிள்ரேஞ் பகுதியில் வசித்து வரும் ஷீலா என்பவரின் வீட்டின் மேற்கூரை முற்றிலுமாக காற்றில் பறந்து முற்றிலும் சேதமடைந்தது.

அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டு காலநிலையில் முற்றிலும் மாற்றம் ஏற்ப்பட்டு குளிர்ந்த காலநிலை நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.

The post கோத்தகிரியில் சூறாவளிக்காற்றுக்கு 20க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Elada ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி பகுதியில் கொட்டி தீர்த்தது கோடை மழை