×

பொறியியல் படிப்புக்கு 2.11 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு 2.11 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 6ம் தேதி தொடங்கியது. தொழில் நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 283 மாணவர்கள் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பதிவு செய்துள்ளனர்.

இதில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 893 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும், ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 470 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 2 லட்சத்து 28 ஆயிரத்து 122 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இந்தாண்டு இந்த எண்ணிக்கை அதை விட உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பொறியியல் படிப்புக்கு 2.11 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Directorate of Technical Education ,Dinakaran ,
× RELATED பி.இ விண்ணப்ப பதிவு மேலும் 2 நாள்...