×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 12,440 கனஅடியாக அதிகரிப்பு!

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 12,440 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 10,232 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடகாவிலிருந்து கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிந்து காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 177 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 3 ,343 கன அடியாக அதிகரித்தது. மேலும் மாலையில் மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 10,232 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இந்நிலையில் இன்று மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 12,440 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையின் தண்ணீர் மட்டம் 64.90 அடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில் நீர் இருப்பு 28.472 டி.எம்.சி. ஆக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 12,440 கனஅடியாக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Salem ,Mattur Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27...