×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரிப்பு: 3வது நாளாக பரிசல் இயக்க தடை

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் அதிகரிப்பின் காரணமாக 3வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தமிழ்நாடு கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியை கடந்தது. நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்திருந்தது. நேற்றைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 17,000 கன அடி என்ற அளவில் இருந்தது.

இந்நிலையில் இன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க தடை விதித்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரித்தால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரிப்பு: 3வது நாளாக பரிசல் இயக்க தடை appeared first on Dinakaran.

Tags : Ogenakal Kaviri River ,Tharumapuri ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்