×

சீராக மின்சாரம் வழங்க கோரிக்கை

தொண்டி, ஜூலை 28: நம்புதாளையில் குறைந்தழுத்த மின் வினியோகம் செய்யப்படுவதை வதை சரி செய்யக் கோரி பொது மக்கள் மனு கொடுத்தனர். தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் புதுத்தெரு பகுதியில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் குறைந்தழுத்த மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பேன், டிவி, மிக்ஸி உள்ளிட்ட மின் சாதன பொருள்கள் இயக்க முடியவில்லை. மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர்.

இப்பகுதியில் சீரான மின் வினியோகம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நம்புதாளை இமாம் கூறியது, தொடர்ந்து சில மாதங்களாக புதுத்தெரு பகுதியில் மின்சாரம் சீராக இல்லை. இரவு நேரத்தில் கடும் சிரமம் ஏற்படுகிது. முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். மாணவர்கள் படிக்க முடியவில்லை. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post சீராக மின்சாரம் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thondi ,Nambuthalai ,Dinakaran ,
× RELATED விதிமீறிய பயணங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து