×

செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது

 

மல்லசமுத்திரம், ஜூலை 28: மல்லசமுத்திரம் அருகே கொன்னையார் பஸ் ஸ்டாப் பகுதியில், எலச்சிபாளையம் எஸ்.ஐ., ராமச்சந்திரன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் சேலம் அருகே பெரிய சீரகாபாடியைச் சேர்ந்த குப்புசாமி மகன் மோகன்குமார்(39) என்பதும், எலச்சிபாளையம் அருகே மோர்பாளையம் பிரிவு சாலையில் உள்ள கடையில் கடந்த 18ம் தேதி 10 செல்போன்களை திருடிச் சென்றதும் தெரியவந்தது. உடனே, அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ₹1 லட்சம் இருக்கும்.தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Elachipalayam SI ,Ramachandran ,Konnaiyar ,Dinakaran ,
× RELATED மிளகு, காபிக்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டம்