×

டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் தொடர் வெற்றி: ஒயிட்வாஷ் ஆன இலங்கை

கொழும்பு: இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. காலேவில் நடந்த முதல் டெஸ்ட்டில் பாக் 4 விக்கெட் வி்ததியாசத்தில் வெற்றிப் பெற்றது. அதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் பாக் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் 2வது டெஸ்ட் ஜூலை 24ம் தேதி கொழும்புவில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 166ரன்னில் சுருண்டது.

தொடர்ந்து விளையாடிய பாக் முதல் இன்னிங்சில் அப்துல்லா 201, சல்மான் 132*ரன் விளாச 5 விக்கெட் இழப்புக்கு 576ரன்னுக்கு டிக்ளேர் செய்தது. அதனால் 4வது நாளான நேற்று 410ரன் பின்தங்கிய நிலையில் இலங்கை 2வது இன்னிங்சை தொடங்கியது. பாக் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை 188ரன்னுக்கு மீண்டும் சுருண்டது.

அதனால் பாக் ஒரு இன்னிங்ஸ் 222ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை வசப்படுத்தியது. இலங்கை அணியில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மாத்யூஸ் ஆட்டமிழக்காமல் 63ரன் எடுத்தார். பாக் தரப்பில் நோமன் அலி 7விக்கெட்களை அள்ள, நசீம் ஷா 3விக்கெட்களை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை பாக் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இலங்கை ஒயிட்வாஷ் ஆனது. தொடர் வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பயின்ஷிப் புள்ளிப் பட்டியலில் 100சதவீத வெற்றியுடன் முதல் இடத்தில் தொடர்கிறது.

* இந்தியா, பாக். ஒற்றுமை!

இலங்கையை ஒரு இன்னிங்ஸ், மற்றும் 222ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியதில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஒற்றுமை உள்ளது. மொகாலியில் 2022ம் ஆண்டு நடந்த முதல் டெஸ்ட்டில் இலங்கையை இதே வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியிருக்கிறது. அதுமட்டுமல்ல இதே ஒரு இன்னிங்ஸ், 222ரன் வித்தியாசத்தில் ஆஸி 1993ம் ஆண்டு நியூசியை சாய்த்துள்ளது.

The post டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் தொடர் வெற்றி: ஒயிட்வாஷ் ஆன இலங்கை appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Sri Lanka ,Colombo ,Galle, Pakistan ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...