×

போலீஸ் ஸ்டேஷனில் பெண் எஸ்ஐ, 3 காவலர்களுக்கு அடி, உதை: 2 பெண்கள் கைது

 

சென்னை: வடபழனி காவேரி தெருவை சேர்ந்தவர் அந்தோணி சேவியர்(45). கடந்த 24ம் தேதி பைக்கில் அசோக்நகர் 3வது அவென்யூ பகுதியில் சென்றபோது 2 பெண்கள் ஸ்கூட்டரில் அந்தோணி சேவியரை உரசுவது போல் சென்றுள்ளனர். இதனால் இரண்டு தரப்புக்கும் தகராறு மூண்டுள்ளது. பெண்கள் அந்தோணியின் பைக் சாவியை பிடுங்கி கொண்டனர். இதுகுறித்து அந்தோணி சேவியர், அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது அந்தோணி சேவியரை பின் தொடர்ந்து வந்த 2 பெண்கள், காவல் நிலையத்தில் புகுந்து அந்தோணி சேவியரிடம், ‘எங்கள் மீதே புகார் கொடுப்பியா’ என்று கேட்டு போலீசார் முன்னிலையில் அவரை அடித்து உதைத்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத எஸ்ஐ ஹேமலதா, போலீஸ் நிலையத்தில் எங்கள் முன்பாகவே வியாபாரியை அடிப்பியா என்று கேட்டீள்ளார். இதனால் 2 பெண்களுக்கும், எஸ்ஐ ஹேமலதாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆந்திரமடைந்த 2 பெண்கள், போலீஸ் நிலையத்திலேயே எஸ்ஐ ஹேமலதாவை தலை முடியை பிடித்து இழுத்து போட்டு அடித்துள்ளனர். அதை தடுக்க வந்த பெண் காவலர் ராணி மற்றும் காவலர் ராம்குமார் ஆகியேரையும் 2 பெண்கள் கீழே தள்ளிவிட்டு ஆபாசமாக திட்டிவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஓட முயன்றனர். அப்போது காவல் நிலையத்தில் இருந்து சக காவலர்கள் இந்த 2 ரவுடி பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் அசோக் நகர் 1வது அவென்யூ பகுதியை சேர்ந்த சோனா(23) மற்றும் பிரியா(22) என தெரியவந்தது. இவர்கள் இருவரும் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

அதைதொடர்ந்து பெண் எஸ்ஐ ஹேமலதா, காவலர்கள் ராணி, ராம்குமார் ஆகியோர் கொடுத்த புகாரின் படி போலீசார் மூன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பிறகு 2 பெண்களின் உறவினர்கள் காவல் நிலையத்துக்கு வந்து பேச்சுவார்த்ைதக்கு பிறகு அவர்களை போலீசார் சொந்த ஜாமீனில் விடுவித்தனர். இந்நிலையில், காவல் நிலையத்திற்குள் புகுந்து பெண்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து காவல் துறையின் உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய 2 பெண்களை எப்படி ஏன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த விஷயத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் உயரதிகாரிகள் அசோக் நகர் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி போலீசார் தற்போது பெண் எஸ்ஐ உட்பட 3 காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய 2 பெண்களை கைது செய்தனர்.

The post போலீஸ் ஸ்டேஷனில் பெண் எஸ்ஐ, 3 காவலர்களுக்கு அடி, உதை: 2 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anthony Xavier ,Vadapalani Kaveri Street ,Ashoknagar 3rd avenue ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...