×

பீர்பாட்டில் வீசி பஸ் கண்ணாடி உடைப்பு பாமக நிர்வாகி கைது

செஞ்சி: நெய்வேலி நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக சேத்தியாத்தோப்பு பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டி சமப்படுத்தும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், செஞ்சி அருகே 3 அரசு பஸ்கள், ஒரு தனியார் பஸ் மற்றும் லாரி மீது பீர்பாட்டில்கள் வீசி கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பஸ் டிரைவர் செந்தில்குமார் கையில் காயம் அடைந்தார். இதுதொடர்பாக செஞ்சி பாமக நிர்வாகி அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.

The post பீர்பாட்டில் வீசி பஸ் கண்ணாடி உடைப்பு பாமக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : BAM ,Birbat ,Senchi ,Chetiathoppu ,Neyveli ,Coal ,Bokline ,
× RELATED ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளரான பிரபல...