×

ஸ்டெர்லைட் – வேதாந்தா நிறுவன உரிமையாளர் அனில் அகர்வால் தமிழகம் வந்தால் போராட்டம்: எதிர்ப்பு இயக்கங்கள் அறிவிப்பு

சென்னை: ஸ்டெர்லைட் – வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால் தமிழ்நாட்டிற்கு வருவதை அனுமதிக்க கூடாது. மீறி தமிழகம் வந்தால் போராட்டம் நடத்தப்படும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் நிறுவனத்தை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற 20 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்களை துப்பாக்கி சூடு நடத்தி அரச பயங்கரவாதத்தால் 15 பேர் பலியானார்கள். ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால் தமிழகம் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் முறைகேடு செய்துள்ளார். அவர் ஒரு சூழலியல் குற்றவாளி. அவர் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி சென்னையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வர இருப்பதாக தெரிகிறது.

இங்கிலாந்தில் குடியேறிய அவர் வேறு ஏதேனும் தேதிகளில் தமிழகத்தில் அடியெடுத்து வைத்தால் கடுமையான எதிர்ப்பு கிளம்பும். குற்றவாளியான அவரை தமிழகத்தில் அனுமதிக்காமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார். பேட்டியின்போது, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளார் பாத்திமா பாபு, ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post ஸ்டெர்லைட் – வேதாந்தா நிறுவன உரிமையாளர் அனில் அகர்வால் தமிழகம் வந்தால் போராட்டம்: எதிர்ப்பு இயக்கங்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sterlite-Vedanta ,Anil Aggarwal ,Tamil Nadu ,CHENNAI ,
× RELATED மணல் குவாரி விவகாரம் அமலாக்கத்துறை...