×

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் தேதி அறிவிப்பு: இணையவழியில் பங்கேற்கலாம்

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் நல துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு (மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு (மாவட்டத்திற்குள் மட்டும்) 03.08.2023 அன்று நடைபெறுகிறது. இத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், இடைநிலை ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு (மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) 4.8.2023 அன்றும் காலை 10 மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பணியிட மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

The post ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் தேதி அறிவிப்பு: இணையவழியில் பங்கேற்கலாம் appeared first on Dinakaran.

Tags : Adi ,Dravidar Welfare Department ,CHENNAI ,Adi Dravidar Welfare Department ,Adi Dravidar Nala ,Dinakaran ,
× RELATED சிவகங்கை அருகே புதிய மாணவர் விடுதி கட்ட கோரிக்கை