×

இந்திய ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் அரசுக்கு இல்லை: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

டெல்லி: ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்; இந்திய ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் அரசுக்கு இல்லை. பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இணைப்பதில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது, உலகின் மிகப்பெரிய ரயில்வே இணைப்புகளில் ஒன்றான இந்திய ரயில்வே, நமது தேசத்தின் உயிர்நாடியாகும்.

ரயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் மற்றும் சரக்கு கையாளுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரயில்வே வழங்கும் சேவைகளின் தரத்தை பராமரிப்பதற்கும். மேம்படுத்துவதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது. நாட்டின் உயிர்நாடியான ரயில்வேத் துறையை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. எனவே இது தொடர்பான வதந்திகளை பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

The post இந்திய ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் அரசுக்கு இல்லை: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Aswini Vaishnav ,Delhi ,
× RELATED ரயில் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பது...