×

அரியலூர் மாணவர் ராகுல் காந்துக்கு தமிழ்நாடு அரசு உதவும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!

சென்னை: அரியலூர் மாணவர் ராகுல் காந்த்துக்கு தமிழ்நாடு அரசு உதவும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராகுல் காந்த் போன்ற மாணவர்களின் வெற்றிக்காகவே நீட் தேர்வை எதிர்க்கிறோம் என முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏழ்மையிலும் ராகுல் காந்தை படிக்க வைத்த அவரது பெற்றோருக்கு முதலமைச்சர் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

நீட் பயிற்சி பெற பணம் இல்லாததால் கால்நடை மருத்துவ படிப்பில் சேரும் அரியலூர் மாணவர் ராகுல் காந்த் முடிவு பற்றி சன் நியூஸ் செய்தி வெளியிட்டது. சைக்கிள் ரிப்பேர் செய்யும் தொழிலாளியான தந்தைக்கு கூடுதல் செலவு வைக்கக் கூடாது என்பதால் கால்நடை மருத்துவ படிப்பில் சேர்கிறேன் என ராகுல் காந்த் தெரிவித்துள்ளார்.

12ம் வகுப்பில் 600க்கு 588 மதிப்பெண் எடுத்தபோதும் நீட் தேர்வுக்கு ஓராண்டு பயிற்சி பெற பணம் இல்லை என மாணவர் ராகுல் காந்த் பேட்டி அளித்துள்ளார். மாணவர் ராகுல் காந்த்தின் உருக்கமான பேட்டியை சன் நியூஸில் ஒளிபரப்பானது. மருத்துவப் படிப்பில் சேர முடியாத ராகுல் காந்த், கால்நடை மருத்துவப் படிப்பு தரவரிசை பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். பிளஸ் டூ தேர்வில் உயிரியல் உள்ளிட்ட 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துளளார்.

The post அரியலூர் மாணவர் ராகுல் காந்துக்கு தமிழ்நாடு அரசு உதவும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Rahul Kant ,CM M.K.Stal ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்