×

அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தை செப்டம்பர் 15 வரை நீட்டித்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஸ்.கே.மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குனராக நீடிக்க முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 4 நாட்களே இருக்கும் சூழலில் செப்டம்பர் 15ம் தேதி வரை எஸ்.கே.மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்க அனுமதி தர ஒன்றிய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசரணைக்கு வந்தது அப்போது அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு பதவிநீடிப்பு வழங்க அனுமதி கோரிய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை இயக்குநருக்கு ஏற்கனவே வழங்கப்பட பதவிநீட்டிப்பு சட்டவிரோதம் என அறிவித்த உச்சநீதிமன்றம் ஜூலை 31ம் தேதி வரை மட்டுமே பதவி நீட்டிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஒன்றிய அரசின் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், எஸ்.கே.மிஸ்ராவை தவிர எஞ்சிய அதிகாரிகள் அனைவரும் தகுதியற்றவர்களா எனகேள்வி எழுதிப்புள்ளது.

எஸ்.கே.மிஸ்ரா என்ற ஒரு நபர் இல்லாமல் ஒட்டுமொத்த அமலாக்கத்துறையும் செயல்பட முடியாதா என்றும் நீதிபதிகள் கட்டமாக விமர்சித்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஸ்.கே.மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குனராக நீடிக்க முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவிலான நிதி மோசடிகளை தடுப்பதற்கான அமைப்புக்கு இந்தியா சார்பில் அளிக்க வேண்டிய அறிக்கையை எஸ்.கே.மிஸ்ரா தயாரித்து வருகிறார். எஸ்.கே.மிஸ்ராவுக்கு செப்டம்பர் 15 வரை மட்டுமே பதவியில் நீடிக்க அனுமதி உள்ளது. எஸ்.கே.மிஸ்ராவுக்கு மீண்டும் பணி நீட்டிப்பு கேட்கக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

The post அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தை செப்டம்பர் 15 வரை நீட்டித்தது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Department of Enforcement S.C. ,K.K. Supreme Court ,Misra ,Delhi ,Supreme Court ,K.K. Misra ,Director of ,Enforcement ,Department ,Dinakaran ,
× RELATED ஐகோர்ட் உத்தரவுப்படி சிஎம்டிஏ...