×

கம்போடியா பிரதமர் ராஜினாமா

புனோம் பென்: தெற்கு ஆசிய நாடான கம்போடியாவில் நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் ஆளும் கட்சியான கம்போடியா மக்கள் கட்சியும் தேர்தலில் கலந்து கொண்டது. எதிர்க்கட்சிகளே இல்லை என்று கூறும் அளவுக்கு அரசியல் சூழ்நிலை உள்ள அங்கு, ஆளும் கம்போடிய மக்கள் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என, எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு சாதகமாக இருந்தது. 125 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 120 இடங்களை பிடித்து கம்போடியா மக்கள் கட்சி 96 சதவீத வாக்குகளுடன் அபார வெற்றி பெற்றது.

ஆசியா நாடுகளிலேயே நீண்ட கால பிரதமராக பதவி வகித்து வந்த ஹூன் சென் (70) மீண்டும் பிரதமராக பதவியேற்றார். கடந்த சில ஆண்டுகளில், முக்கிய எதிர்க்கட்சிகளை சிதறடித்து, அரசியலில் சிம்மசொப்பனமாக ஹூன் சென் விளங்கி வருகிறார். இந்தநிலையில் பிரதமர் பதவியில் இருந்து சென் பதவி விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். 3 வாரங்களுக்குள் பொறுப்புகள் அனைத்தையும் தன் மூத்த மகனான ஹூன் மனேட்டிடம் ஒப்படைத்து விட்டு பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார். தற்போது பாதுகாப்பு துறை இலாகாவை ஹூன் மனேட் கவனித்து வருகிறார்.

The post கம்போடியா பிரதமர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Cambodia ,Punom Ben ,Dinakaran ,
× RELATED கம்போடியாவில் மசினகுடி வாலிபர் மாயம்:...