×

திருச்செந்தூர் கோயிலில் வெள்ளை யானை உலா

திருச்செந்தூர்: ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இதை நினைவு கூரும் விழா, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

மாலையில் கோயில் யானையின் உடல் முழுவதும் மாவு பூசி வெள்ளை நிறத்தில் யானையும், தங்க சப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் கோயிலில் இருந்து புறப்பட்டு சன்னதி தெரு, உள் மாடவீதி மற்றும் ரதவீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் கோயில் சேர்ந்தனர். தொடர்ந்து கோயில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதியில் வெள்ளை நிற யானை முன்பு சேரமாள்பெருமானும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post திருச்செந்தூர் கோயிலில் வெள்ளை யானை உலா appeared first on Dinakaran.

Tags : Tiruchendur temple ,Tiruchendur ,Swathi Nakshatra Day ,Adi ,Sundaramurthy Nayanar ,Lord Shiva ,Tirukhailaya ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையை கொண்டாட கொளுத்தும் வெயிலிலும் குவிந்த பக்தர்கள்