×

நெல்லை வண்ணாரப்பேட்டையில் மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த விவகாரம்: கிராம மக்கள் சாலை மறியல்

நெல்லை: நெல்லை வண்ணாரப்பேட்டையில் மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மோட்டாரிலிருந்து மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த நிலையில் நெல்லை – மதுரை சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வண்ணாரப்பேட்டை அம்பேத்கர் நகர் வடக்குத்தெரு பகுதியில் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் நேற்று மாலை 7 வயதான சிறுமி சத்யா தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது தண்ணீர் வராத காரணத்தினால் மோட்டாரில் கை வைத்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சியின் கவனக்குறைவின் காரணமாக விபத்து நடந்துள்ளது என அப்பகுதி மக்களும், சிறுமியின் உறவினர்களும் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மாநகராட்சி தரப்பில் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை எனக்கூறி நெல்லை வண்ணாரப்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தும்போது ருதரப்பினருக்கும் லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக வரவழைக்கப்பட்டு முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

The post நெல்லை வண்ணாரப்பேட்டையில் மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த விவகாரம்: கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Nellai Vannarappet ,Nellai ,Nellai Vannarappettai ,Dinakaran ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு