×

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான மேல்முறையீட்டு வழக்கில் 2ம் நாளாக விசாரணை தொடங்கியது சுப்ரீம் கோர்ட்..!!

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான மேல்முறையீட்டு வழக்கில் 2ம் நாளாக விசாரணை தொடங்கியது. செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வருகிறார்.

காவல், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விஜய் மதன்லால் உத்தரவு தெளிவுபடுத்தி உள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரியாக கருதப்பட்டால், அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கு இருக்கும். போலீசாருக்கு உள்ள அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருந்தால் அது பி.எம்.எல்.ஏ. விதிகளுக்கு புறம்பானது என கபில் சிபல் தனது வாதத்தை முன்வைத்து வருகிறார்.

அமலாக்கத்துறையால் கைது செய்ய முடியும்: உச்சநீதிமன்றம்

அதிகமான தரவுகளை பெறவே ஒருவரை விசாரணை முகமைகள் கைது செய்கின்றன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் பணம் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய வேண்டும். சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருக்கிறது தானே என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

செந்தில்பாலாஜியை விசாரிக்கலாம்: கபில் சிபல்

செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையை யாரும் தடுத்து நிறுத்தவில்லை என கபில்சிபல் தெரிவித்துள்ளார். செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையை யாரும் தடுத்து நிறுத்தவில்லை என்றும் கூறினார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான மேல்முறையீட்டு வழக்கில் 2ம் நாளாக விசாரணை தொடங்கியது சுப்ரீம் கோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Suprem Court ,Delhi ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...