×

விவசாயிகளுடன் மத்திய அரசு தோளோடு தோள் நிற்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஜெய்பூர்: விவசாயிகளுடன் மத்திய அரசு தோளோடு தோள் நிற்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் 7 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். புதிதாக கட்டப்பட்டுள்ள 4 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்த பிரதமர் மோடி, 7 கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார். புதிய கல்லூரிகள் திறப்பால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. 12 புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவுவதன் மூலம் மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். இடங்கள் 6,275ஆக உயரும்.

பின்னர் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் சக்தியும் விவசாயிகளின் கடின உழைப்பும் மண்ணிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கின்றன. அதனால்தான் நமது அரசு விவசாயிகளுடன் தோளோடு தோள் நிற்கிறது. சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகளின் வலி மற்றும் துக்கத்தை புரிந்துகொள்ளும் அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. அதனால்தான் கடந்த 9 ஆண்டுகளாக விவசாயிகளின் நலன் கருதி அரசு பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது என்றார். நாட்டின் விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்ரித்தியின் கீழ் ரூ.18,000 கோடி கிடைத்துள்ளது.

இன்று, 1,25,000 பிரதமர் கிசான் சம்ரித்தி கேந்திரா மையங்கள் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன. கிராம அளவில் விவசாயிகள் பயனடைவார்கள். விவசாயிகளுக்கு டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. புதிய யூரியா தங்கம் தொடங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஏக்லவ்யா மாதிரிப் பள்ளிகளும் பெற்றுள்ளன என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், உடல்நிலை சரியில்லாததால் அவர் பங்கேற்கவில்லை. அவர் நலமடைய பிரார்த்திக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகளுடன் மத்திய அரசு தோளோடு தோள் நிற்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Narendra Modi ,Rajasthan ,Jaipur ,Narendra Modi ,central government ,Prime Minister Narendra Modi ,
× RELATED பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்ய...