×

ஆர்.எஸ்.மங்கலம் கோயில் விழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்

ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 27: ஆர்.எஸ்.மங்கலத்தில் அரசாள வந்த அம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி விழா நடைபெற்றது. பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில், பெண்கள் திரௌபதி அம்மன் ஆலயத்தில் இருந்து பூத்தட்டுக்களுடன் ஊர்வலமாக சென்று அரசாள வந்த அம்மன் ஆலயம் வந்தடைந்தனர்.

தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்திருந்த பூக்கள் மூலம் மூலவர்கள் அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு மலர்களால் மலர் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் முளைப்பாரி எடுத்து கோயிலில் வைத்து வழிபாடு செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவின் தொடர்ச்சியாக நேற்று அரசாள வந்த அம்மன் கோயிலில் இருந்து முளைப்பாரி தூக்கி முக்கிய வீதிகள் வழியாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

பூவானிக்கரை விநாயகர் ஆலயத்தில் முளைப்பாரிகளை வைத்து பெண்கள் கும்மியடித்து தங்களின் நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர். அதன் பின்பு அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட முளைப்பாரிகளை பக்தி பரவசத்துடன் அரசூரணியில் உள்ள தண்ணீரில் கொட்டி பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடன்களை நிறைவேற்றி கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

The post ஆர்.எஸ்.மங்கலம் கோயில் விழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : mulaipari ,RS Mangalam temple festival ,RS Mangalam ,Goddess Amman ,R.S. Mangalam temple festival ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு