திருப்புத்தூர், ஜூலை 27: திருப்புத்தூர் நகர் பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் உள்ள நூற்றுக்கணக்கான தெருக்களில் ஏராளமான நாய்கள் ரோடுகளிலும், நடைபாதைகளிலும், சந்துகளிலும், நூற்றுக்கணக்கான நாய்கள் சுற்றி திரிகின்றன. இதில் பல நாய்கள் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் ரோடுகளில் திரியும் நாய்கள் கூட்டமாக சென்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நடந்து செல்லும் மாணவிகள் மற்றும் சைக்கிள், டூவீலர்களில் செல்லும் நபர்களை விரட்டி வருவதால் மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருப்புத்தூர் நகர் பகுதியில் சாலைகளில் நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் கூட்டமாக சுற்றி தெரியும் நாய்கள் கடித்து மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் முன்பு பேரூராட்சி நிர்வாகம் தெருக்களில் கூட்டமாக சுற்றி தெரியும் நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருப்புத்தூர் நகர் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.
