×

தென்பெண்ணை ஆற்றில் ஆகாயத்தாமரை அகற்றம்

காவேரிப்பட்டணம், ஜூலை 27: காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் கேஆர்பி அணையில் இருந்து காவேரிப்பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சந்தாபுரம், மூலிகான்சவூலூர், சாப்பரத்தான் கொட்டாய், முதலைகான் கொட்டாய், மாரிசெட்டி அள்ளி, மணி நகர் உள்ளிட்ட கிராமங்களின் உள்ள விவசாய நிலங்களுக்கு கிருஷ்ணன் கால்வாய் வழியாக தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால், 3000 ஏக்கர் நெல் மற்றும் தென்னைகள் பயன்பெறுகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக தென்பென்னையாற்று கால்வாய்களில் ஆகாயத்தாமரை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், கோழி கழிவுகள் ஆகியவை நீரோட்டத்திற்கு தடையாக உள்ளது. இதுகுறித்து விவசாயிகளும், பொதுமக்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், விவசாயிகளும் பொதுமக்களும் இணைந்து ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகளை அகற்றினர். ஆனாலும், முழுமையாக ஆகாய தாமரைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தென்பெண்ணை ஆற்றில் ஆகாயத்தாமரை அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Agayathamar ,Tenpenna River ,Kaveripatnam ,Cauverypatnam ,Chandapuram ,KRP Dam ,
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...