×

அரசு பள்ளி வளாகத்தில் மரங்கள் வெட்டி சாய்ப்பு

 

தாரமங்கலம், ஜூலை 27: தாரமங்கலம் அருகே, மல்லிகுட்டை கிராமம் அத்திராம்பட்டி பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் 55 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் 20ஆண்டுகள் பழமையான 10க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளது. இந்நிலையில் பழமையான 2மரங்களை அடியோடு வெட்டியுள்ளனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் சிலர், மரங்களை ஏன் வெட்டுகிறீர்கள் என, பள்ளியின் தலைமை ஆசிரியர் சரஸ்வதியிடம் கேட்டுள்ளனர். அவர் முறையாக பதில் கூறாமல் பேசியுள்ளார். தகவல் அறிந்த விஏஓ.,க்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஒரு டிராக்டரில் லோடு ஏற்றி வைத்திருந்த மரங்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள மிகப்பெரிய 2மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு கிடந்தன. இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பள்ளியில் கூடுதல் கட்டிடம், சமையல் கூடம், கழிப்பறை ஆகியவை கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளுக்கு இடையூறாக இருந்ததால், மரங்களை வெட்டியது தெரியவந்தது. மேலும், மரங்களை வெட்டுவது ஒன்றிய அதிகாரிகளுக்கு தெரியும் எனவும், மரங்களை வெட்டி விட்டு கட்டிடம் கட்டுமாறு கூறியதாக தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘பள்ளியில் இருந்த மரங்களை வருவாய்த்துறை அனுமதியின்றி வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கலெக்டருக்கும், மேட்டூர் கோட்டாட்சியருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரசு பள்ளி வளாகத்தில் மரங்கள் வெட்டி சாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Dharamangalam ,Government Panchayat Union Primary School ,Mallikuttai village ,Athirampatti ,
× RELATED வாகனம் மோதி விவசாயி பலி