×

ரூ.30 லட்சத்தில் மிளகு, காபி பதனிடும் மையம்

 

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் 50 மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த பெண்களுக்கு ஒன்றிய அரசின் வந்தன் விகாஸ் திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சம் மதிப்பில் மிளகு, காபி போன்ற உற்பத்தி பொருட்களை பதனிடும் மையம் அமைக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம் வாழவந்திநாடு ஊராட்சி செம்மேடு லேம்ப் கூட்டுறவு சங்கத்தில், தமிழ்நாடு பழங்குடியின கைவினை கலைஞர்களை பட்டியலில் சேர்க்கும் முகாம் நடந்தது. பழங்குடியினர் நலத்துறை துணை கலெக்டர் பீட்டர் தலைமை வகித்தார். பழங்குடியினர் அணி மாநில தலைவர் சிவப்பிரகாசம், கூட்டுறவு சங்க செயலாளர்கள் மகேந்திரன், ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். மலைப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களின் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் வந்தன்விகாஸ் திட்டத்தின் கீழ், செம்மேடு பவர்காடு பகுதியைச் சேர்ந்த 50 மகளிர் சுயஉதவி குழு பெண்களுக்கு மிளகு, காப்பி போன்ற உற்பத்தி பொருட்களை பதனிடும் மையங்கள் அமைக்க ரூ.30 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. அதனை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ரூ.30 லட்சத்தில் மிளகு, காபி பதனிடும் மையம் appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Union Government ,Kollimalai ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை