×

கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தாம்பரம் மாநகராட்சியில் 33,806 விண்ணப்பங்கள் பதிவு: ஆணையர் அழகுமீனா தகவல்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு, மூன்று நாட்களில் 33,806 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மாநகராட்சி ஆணையர் அழகுமீனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா நேற்று வெள்ளியிட்டுள்ள அறிக்கை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்தும் வகையில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தாம்பரம் மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது. அதில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.7.2023 அன்று தொடங்கி 4.8.2023 வரை நடைபெற உள்ளது.

இரண்டாம் கட்ட முகாம் 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம் நடக்கிறது. இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சியில் 24.7.2023 அன்று ஐந்து மண்டலங்களிலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கப்பட்டு அன்றைய தினம் 9,502 விண்ணப்பங்களும், இரண்டாம் நாளான 25.7.2023 அன்று 12,065 விண்ணப்பங்களும், தொடர்ந்து மூன்றாம் நாளான 26.7.2023 அன்று 12,239 விண்ணப்பங்கள் என மொத்தம் 33,806 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தாம்பரம் மாநகராட்சியில் 33,806 விண்ணப்பங்கள் பதிவு: ஆணையர் அழகுமீனா தகவல் appeared first on Dinakaran.

Tags : Tambaram Municipal Corporation ,Commissioner ,Akummeena ,Tambaram ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...