×

மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மணிப்பூர் கலவரத்தை கண்டித்து, மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்யினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாய சங்கம் உள்ளிட்ட பல்வேற கட்சிகள் பங்கேற்றன. இதில், மதுராந்தகம் நகரமன்ற தலைவர் மலர்விழிகுமார் கண்டன உரையாற்றினார். திமுக நகர செயலாளர் குமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா, வட்ட செயலாளர் ராஜா, விவசாய சங்க வட்ட செயலாளர் அர்ஜூன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் அவற்றை தடுக்கத்தவறிய மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

The post மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Manipur ,Madhurandagam ,riots ,Madhurandakam ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நிலநடுக்கம்