×

30 எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக போலி கடிதம் வைரலாக்கியது பாஜ சதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று கர்நாடக மாநில போக்குவரத்து மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே அமைச்சர் ராமலிங்க ரெட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 30 பேர் அதிருப்தியடைந்து முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியிருப்பது போல் போலி கடிதத்தை உருவாக்கி அதனை சமூக வலைதளங்களில் வைரலாக்கி பாஜக செய்யும் சதி. காங்கிரஸ் அரசை கவிழ்க்க சிங்கப்பூரில் வியூகம் வகுப்பதாக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார். 5 ஆண்டுகள் முழுமையாக இந்த அரசு ஆட்சியில் இருக்கும் என்றார்.

The post 30 எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக போலி கடிதம் வைரலாக்கியது பாஜ சதி appeared first on Dinakaran.

Tags : BJP ,Tirumala ,Karnataka State Transport ,Hindu ,Minister ,Ramalinga Reddy Swamy ,Tirupati Seven Malayan Temple ,
× RELATED வேங்கடவனை நினைக்க வினைகள் அகலும்!