×

கிரிப்டோ கரன்சி நகைப்பட்டறை அதிபரை ஏமாற்றி ரூ.23 லட்சம் மோசடி: ஏட்டு மீது வழக்கு

சேலம்: சேலம் தாதகாபட்டி குமரன் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(41). செவ்வாய்பேட்டையில் நகை பட்டறை வைத்துள்ளார். இவர் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவில் கொடுத்துள்ள புகாரில், எனது நண்பர் முருகன் மூலமாக வேலூரில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவில் ஏட்டாக பணியாற்றும் முத்துசாமியிடம் பழக்கம் ஏற்பட்டது. இவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் இரட்டிப்பு வருமானம் வரும் என ஆசைவார்த்தை கூறினார். இதில் முதலீடு செய்ததாக கூறி என்னிடம் ரூ.47 லட்சம் வரை பெற்றுக்கொண்டார். இதில் ரூ.24 லட்சம் மட்டும் திரும்ப கொடுத்தார். மீதி ரூ.23 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு ஏமாற்றி வருகிறார். அவரிடம் இருந்து பணத்தை மீட்டு தருமாறு கூறியிருந்தார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏட்டு முத்துசாமி மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிரிப்டோ கரன்சி நகைப்பட்டறை அதிபரை ஏமாற்றி ரூ.23 லட்சம் மோசடி: ஏட்டு மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Ledu ,Salem ,Salem Dadakapatti ,Kumaran City ,Senthilkumar ,Salem City ,Dinakaran ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...