×

கம்போடிய பிரதமர் பதவி விலக முடிவு

நாம்பென்: கம்போடியாவின் பிரதமர் ஹன் சென் அடுத்த மாதம் பதவி விலக போவதாக அறிவித்துள்ளார். அவரது மகன் புதிய பிரதமராக பதவியேற்கிறார். கம்போடியாவில் கடந்த 38 ஆண்டுகளாக ஹன் சென் பிரதமர் பதவி வகிக்கிறார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஹன் சென்னின் கம்போடிய மக்கள் கட்சி மொத்தம் உள்ள 125 இடங்களில் 120 இடங்களை கைப்பற்றியது.

எதிர்க்கட்சிகளை ஓரங்கட்டிய இந்த தேர்தல், நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவில்லை என மேற்கத்திய நாடுகள், ஜனநாயக உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய ஹன் சென் இன்னும் 3 வாரங்களில் பதவி விலக உள்ளேன். என்னுடைய மூத்த மகன் ஹன் மன்னேத்(45) ஆக.22ம் தேதி பொறுப்பை ஏற்பார். இதுகுறித்து கம்போடிய அரசர் நொரோடம் சிஹாமனியிடம் தெரிவித்துள்ளேன். அவரும் அதற்கு சம்மதித்துள்ளார் ’’ என்றார்.

The post கம்போடிய பிரதமர் பதவி விலக முடிவு appeared first on Dinakaran.

Tags : Nampen ,Cambodia ,Hun Sen ,Cambotian ,Dinakaran ,
× RELATED கம்போடியாவில் மசினகுடி வாலிபர் மாயம்:...