×

உலக நாடுகளில் அரிசி விலை பன்மடங்கு உயர்வு அரிசி ஏற்றுமதி தடையை இந்தியா நீக்க ஐஎம்எஃப் கோரிக்கை

வாஷிங்டன்: அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தியா நீக்க வேண்டும் என சர்வதேச நாயண நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது. உலகில் அரிசி உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் முன்னிலை வகித்து வருகிறது. உலகளவில் இந்தியாவில் இருந்தே 40 சதவீத அரிசி ஏற்றுமதியாகிறது. இதில் பாசுமதி அல்லாத வௌ்ளை அரிசி 25 சதவீதமாக உள்ளது. இந்த வௌ்ளை அரிசியை அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா தாய்லாந்து, இத்தாலி, இலங்கை உள்பட 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு கடந்த 20ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது. இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை அறிவிப்பால் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வௌிநாடுகளில் அரிசி விலை உயர்ந்துள்ளது. ஆனால் விலையையும் பொருட்படுத்தாமல் அரிசி வாங்க கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதையடுத்து அரிசி ஏற்றுமதி மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பியர் ஒலிவியர் கோரின்சாஸ் கூறும்போது, “இந்திய அரிசி ஏற்றுமதி தடையால் உலக நாடுகளில் உணவு பொருட்களின் விலை உயரும். இதனால் பாதிக்கப்படும் நாடுகள் எதிர்வினை செயல்களில் ஈடுபடலாம். 2022ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்திய பொருளாதாரம் சற்று சரிந்திருந்தாலும் எனவே இந்த தடை தேவையற்றது” என்றார்.

The post உலக நாடுகளில் அரிசி விலை பன்மடங்கு உயர்வு அரிசி ஏற்றுமதி தடையை இந்தியா நீக்க ஐஎம்எஃப் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : IMF ,India ,Washington ,International Monetary Fund ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் முதலீடு: வாரன் பஃபெட் விருப்பம்