×

வரி கட்டாத பிரச்னை அமெரிக்க அதிபர் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்

வில்மிங்டன்: வரி கட்டாதது தொடர்பான வழக்கில் அமெரிக்க அதிபர் பைடன் மகன் ஹண்டர் நேற்று டெலாவேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆனார். அமெரிக்க அதிபர் பைடனின் 2வது மகன் ஹண்டர். இவர் மீது வெளிநாட்டு வணிக பரிவர்த்தனைக்கு வரிகட்டாதது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியது, துப்பாக்கி பயன்படுத்தியது உள்ளிட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கை விசாரிக்க டெலாவேர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி மேரிலென் நோரிகா நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அதிபர் பைடனின் மகன் ஹண்டர் நேற்று டெலாவேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜனர் ஆனார். அவர் அங்கு வரி கட்டாதது தொடர்பான குற்றங்கள் உள்பட அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டு பொது மன்னிப்பு கேட்டார். 2015ம் ஆண்டு தனது சகோதரர் பியூ பைடன் மரணத்தை தொடர்ந்து போதைக்கு அடிமையானதாக அவர் ஒப்புக்கொண்டார். அவருக்கு தண்டனை அளிப்பதா அல்லது பொது மன்னிப்பு வழங்குவதா என்பது குறித்து நீதிமன்றத்தில் விவாதம் நடந்தது.

The post வரி கட்டாத பிரச்னை அமெரிக்க அதிபர் மகன் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : US ,President ,Wilmington ,Biden ,Hunter ,Delaware ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்