×

என்எல்சிக்கு நிலம் எடுப்பு எந்த எல்லைக்கும் சென்று போராட தயாராக இருக்கிறோம்: அன்புமணி எச்சரிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி பகுதியில் உள்ள கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட காவலர்களைக் குவித்து 30க்கும் மேற்பட்ட ராட்சத எந்திரங்களைக் கொண்டு வந்து வேளாண் விளைநிலங்களில் இறக்கி, பயிர்களை சேதப்படுத்தி, அந்த நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. கதிர்விடும் நிலையில் உள்ள பயிர்களை அழிக்கிறது. இத்தகையக் கொடுமைகள் உலகில் மக்களாட்சி நடைபெறும் எந்த நாட்டிலும் நடப்பதில்லை. ஆனால், விளைந்த பயிர்களை ராட்சத எந்திரங்களைக் கொண்டு அழிக்கும் கொலைபாதகச் செயலை என்எல்சி நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது.

அனைத்தையும் இழந்து விட்டு, கொதித்து நிற்கும் விவசாயிகள் வெகுண்டெழுந்து போராடும் நிலையையும், அதனால் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சிக்கல் ஏற்படக்கூடிய நிலையை என்எல்சி நிறுவனம் ஏற்படுத்தி விடக் கூடாது. விவசாயிகளின் நலனை காக்க எந்த எல்லைக்கும் சென்று போராட தயாராக இருக்கிறோம். ஜி.கே.வாசன்: நிலம் அளித்த விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், நிலத்திற்கு உரிய இழப்பீடும் வழங்குவது என்எல்சி நிர்வாகத்தின் கடமையாகும். அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தற்பொழுது அழிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடும், மீதமுள்ள விவசாய நிலங்களுக்கு உரிய கால அவகாசமும் அளிக்க வேண்டும்.

The post என்எல்சிக்கு நிலம் எடுப்பு எந்த எல்லைக்கும் சென்று போராட தயாராக இருக்கிறோம்: அன்புமணி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : NLC ,Anbumani ,CHENNAI ,PAMC ,President ,Kattaholi, Karivetti ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...