×

அண்ணாமலைக்கு பதிலளித்து கொண்டிருந்தால் பணி செய்ய முடியாது: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோடு: அண்ணாமலைக்கு பதிலளித்து கொண்டிருந்தால் எங்கள் பணியை செய்ய முடியாது என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகில் இணைப்பு சாலை அமைப்பதற்கான திட்டம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அப்பணிகளை மேற்கொள்வதற்காக அமைச்சர் சு.முத்துசாமி மருத்துவமனை வளாகத்தில் இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், ஈரோடு மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகில் கடந்த அதிமுக ஆட்சியில் மேம்பாலம் அமைத்தபோது, போதிய இணைப்பு சாலை அமைக்க தவறிவிட்டனர். இதுகுறித்து பொதுமக்களின் நலனை கருதி போக்குவரத்துக்காக இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, அரசு மருத்துவமனை வளாகத்தையொட்டி உள்ள சாலையை அகலப்படுத்தி இணைப்பு சாலை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி, அரசு மருத்துவமனை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசித்து வளாகத்திற்குள் இருக்கும் கழிப்பறை, புறகாவல் நிலையம், மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் மாற்றி அமைத்து, சாலையை அகலப்படுத்தும் பணி விரைவில் துவங்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து, பாஜ தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியிடுவது தொடர்பாக நிருபர்கள் கேள்வி கேட்டபோது, ‘‘அண்ணாமலை அவரது வேலை செய்கிறார். அவருக்கு எல்லாம் பதிலளித்து கொண்டிருந்தால், எங்கள் பணியை நாங்கள் செய்ய முடியாது’’ என்று அமைச்சர் கூறினார்.

The post அண்ணாமலைக்கு பதிலளித்து கொண்டிருந்தால் பணி செய்ய முடியாது: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Muthusamy ,Erote ,Erode ,Anamalayas ,Suzuka ,Erod ,Government of Erod ,Anamalai ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...