×

திருச்சிக்கும் திமுகவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு, திருச்சி திமுகவின் தீரர்களின் கோட்டை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

திருச்சி: நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் டெல்டா மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் ஆலோசனை நடத்தினார். பயிற்சி பாசறையில் 15 மாவட்டங்களை சேர்ந்த 12,600 வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றுள்ளனர். திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; திருச்சிக்கும் திமுகவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு எனவும் திருச்சி திமுகவின் தீரர்களின் கோட்டை.

டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் ஒருவர் கூட நம்மை நிராகரிக்க மாட்டார்கள். ஒவ்வொரு நாளும் 10 வீடுகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். உங்களின் தகுதிவாய்ந்த கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படு. மீண்டும் பாஜக ஆட்சி அமைக்குமானால் இந்தியாவில் ஜனநாயகமே இருக்காது. தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட வேண்டும்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி அமைப்புகள் உட்பட அனைத்தையும் காலி செய்துவிடுவார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த கூட்டம்தான் தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக இருந்தது. நல்ல விஷயங்களை பரப்ப ஒவ்வொருவரும் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்க வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் அரசின் நலத்திட்ட பணிகளை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

மீண்டும் பாஜக ஆட்சி அமைக்குமே ஆனால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது, தமிழ்நாடு என்ற மாநிலமோ, முதல்வரோ, சட்டமன்றமோ இருக்காது. உள்ளாட்சி அமைப்புகள் முதல் அனைத்தையும் காலி செய்து விடுவார்கள். குறுகிய காலத்தில் கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக அமைச்சர் கே.என்.நேருவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். திமுக தொடங்கி 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக திமுக பொறுப்பாளர்கள் உழைக்க வேண்டும். திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு
அழைத்து வரவேண்டிய முக்கிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு உள்ளது. வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மக்களை தொடர்ந்து புன்னகையோடு அணுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

The post திருச்சிக்கும் திமுகவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு, திருச்சி திமுகவின் தீரர்களின் கோட்டை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Thimugu ,Dirans of Thimugu ,CM B.C. ,G.K. stalin ,Chief Minister ,Muhammad Modi ,Delta District ,of ,Trichy Thimugu ,First Minister ,B.C. G.K. Stalin ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்