×

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. செந்தில் பாலாஜி வழக்கை நீதிபதிகள் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு நாளைக்கு ஒத்திவைத்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி, அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. சுங்க அதிகாரியால் ஒருவரை கைது செய்ய முடியுமா என்றால் அது முடியாது.

கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை சுங்க அதிகாரிகள் பிடித்து போலீசிடம் ஒப்படைக்கலாம். காவல்துறையினர்தான் கைது செய்ய முடியும்; இது அமலாக்கத்துறையினருக்கும் பொருந்தும் என கபில் சிபல் தெரிவித்தார். எவ்வளவு நேரம் வாதிடுவீர்கள் என்ற நீதிபதிகள் கேள்விக்கு ஒரு நாள் முழுவதும் தேவை என கபில் சிபல் பதில் அளித்தார். மேலும், சட்ட விதிப்படி கைது செய்யப்பட்டு நடத்தப்படுகின்றோமா என்பதை கருத்தில் கொள்ள, உறுதிப்படுத்த செந்தில் பாலாஜிக்கு உரிமை உண்டு.

சிஆர்பிசி 167-ன்படி விசாரணை முடியாது என்றால் என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் என்பது போலீசாருக்கே உட்பட்டது. குற்றவியல் நடைமுறை சட்டம் 167 பிரிவின் அடிப்படையில் செயல்பட அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. அதே வேளையில் அமலாக்கத்துறை காவல் அதிகாரிகளாக கருதப்படும் வரை இந்த வேறுபாடு என்பது சிக்கலானது என கபில் சிபல் வாதம் செய்தார்.

இதுபோன்று, அமலாக்கத்துறை தரப்பிலும் வாதம் முன் வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தை விரைந்து விசாரிக்கும்படி அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. செந்தில் பாலாஜி தரப்பு தங்கள் வாதங்களை நாளை நிறைவு செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Supreme Court ,Delhi ,Justices ,Bopanna ,M. MM Sunderaresh ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்...