×

ரெட்டிப்பாளையத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்

 

அரியலூர், ஜூலை 26:அரியலூர் மாவட்டம், ரெட்டிப்பாளையத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசியதாவது, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன்: ரெட்டிப்பாளையத்திலுள்ள நீர் நிலையில் தான் சிமென்ட் நிறுவனம் ஆலையை கட்டியுள்ளது என்பதை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள சிமென்ட் ஆலை மீது நடவடிக்கை எடுத்து, நீர் நிலைகளை மீட்க வேண்டும். நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து கட்டாயம் வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வரத்து வாய்க்கால், பாசன வடிகால் வாய்க்கால்களை சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார வேண்டும். தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்துக்கும், அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்துக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.

The post ரெட்டிப்பாளையத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Redtipalayam ,Ariyalur ,Redtipalayam, Ariyalur district ,Kraditheer.… ,Dinakaran ,
× RELATED அரியலூரில் முன்னேற்பாடு பணி ஆய்வு...