×

கிராமப்புற பயிற்சி துவக்கம் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் முகாம்

 

கோவை, ஜூலை 26: கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு முகாம், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் முன்னிலை வகித்தார். இம்முகாமில், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.

கிழக்கு மண்டலத்தில் 12 மனு, மேற்கு மண்டலத்தில் 7 மனு, வடக்கு மண்டலத்தில் 9 மனு, தெற்கு மண்டலத்தில் 8 மனு, மத்திய மண்டலத்தில் 8 மனு, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 3 மனு என மொத்தம் 47 மனுக்களை மேயர் பெற்றுக்கொண்டார். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். இம்முகாமில், மண்டல உதவி கமிஷனர்கள், உதவி கமிஷனர் (வருவாய்), செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி நகரமைப்பு அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், மாநகராட்சி அனைத்து பிரிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post கிராமப்புற பயிற்சி துவக்கம் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.

Tags : Rural Training Municipal People's Grievance Redressal Camp ,Coimbatore ,Coimbatore Corporation People ,Grievance Camp ,Rural ,Initiation ,Corporation People's Grievance Redressal Camp ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...