×

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

 

மதுரை, ஜூலை 26: மதுரை கோபுதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் முகமது ரபி முன்னிலை வகித்தார். உதவித்தலைமையாசிரியர் ஜாகிர் உசேன் வரவேற்றார். குரு குழும நிறுவனங்களின் உரிமையாளர் முத்துக்கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்கரலிங்கம் பேசுகையில், `நான் முதல்வன்’ திட்டத்தை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவும், கனவு மெய்ப்பட கல்லூரிப் படிப்பு அவசியம் எனறும் கூறினார். முதுகலை ஆசிரியர் தமிழ்க்குமரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவித்தலைமையாசிரியர் ரஹமத்துல்லா மற்றும் ஆசிரியர் அபுதாஹிர் செய்திருந்தனர்.

The post உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu Government School Education Department ,Madurai Gobudur Al-Amin Secondary School ,Dinakaran ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!