×

குருவாயூர் கோயில் முகாமில் யானைகளின் பாதநோய்க்கு சிறப்பு சிகிச்சை

 

பாலக்காடு, ஜூலை 26: கேரளா மாநிலம், புணத்தூர்கோட்டையில் குருவாயூர் தேவஸ்தானத்தின் வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள தரை நிலங்களில் யானைகளின் கால் பாதங்கள் பதிந்து நகங்களில் சதுப்பு மண் அகப்படுவதை தவிர்க்கவும், பாதநோயை குணப்படுத்தவும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 10 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த யானைக்கொட்டில் தற்போது யானைகளின் பாதநோய் சிகிச்சைக்காக திறக்கப்பட்டது. யானைகளின் பாதநோய் சிகிச்சைக்காக மரத்தால் கூண்டு அமைத்து யானை கொட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கூண்டில் யானைகளுக்கு பாதங்கள் மண்ணில் பதியாமலும், பாதங்களுக்கு நனைவு தட்டாமலும் இருப்பதற்காக வசதி செய்யப்பட்டுள்ளது. புணத்தூர்கோட்டையில் செந்தாமராக்ஷன் என்னும் வளர்ப்பு யானை பாத நோயால் பாதிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது. இந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து நந்தினி என்கிற வளர்ப்பு யானையை கூண்டில் அடைத்து பாத சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என புணத்தூர்கோட்டை துணை நிர்வாகி மாயாதேவி தெரிவித்தார்.

The post குருவாயூர் கோயில் முகாமில் யானைகளின் பாதநோய்க்கு சிறப்பு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Guruvayur temple ,Palakkad ,Guruvayur Devasthanam ,Punathurkottai, Kerala ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி